Monday, November 18, 2024

நான் மற்ற மொழிகளில் நடிக்காமல் இருப்பது ஏன் தெரியுமா? மனம் திறந்த‌ டோவினோ தாமஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களின் நண்பராக தொடர்ந்து பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த பிறகு, வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக வளர்ந்து, தற்போது முன்னணி ஹீரோவாக முன்னேறியவர் டொவினோ தாமஸ். தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து, வெற்றிகளை பெற்றுக்கொண்டு ரசிகர்களின் கவனத்தையும் தக்க வைத்திருக்கிறார். இந்நிலையில், தற்போது அவர் மலையாளத்தில் நடித்துள்ள “அஜயன்டே ரெண்டாம் மோசனம்” எனும் படம் செப்டம்பர் 12ஆம் தேதி வெளியாக உள்ளது.

மலையாள நடிகர்களான துல்கர் சல்மான், பஹத் பாசில் போன்றோர் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் அதிக கவனம் செலுத்தி நடித்து வரும்போது, டொவினோ தாமஸ் “மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகள் மட்டுமே எனக்குப் போதும்” என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். தமிழில் “மாரி 2” படத்தில் மட்டுமே நடித்த அவர், மற்ற மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. இதற்கு அவர் கூறிய காரணம் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அதுகுறித்து அவர், ஹிந்தியில் அமீர்கான் நடித்த “லால் சிங் சத்தா” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் (சித்தார்த் நடித்தது) நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், இங்கே நான் படங்களில் பிஸியாக இருந்ததால் அதில் நடிக்க இயலவில்லை. மேலும், ஒவ்வொரு மொழியிலும் சிறந்த பல நடிகர்கள் உள்ளார்கள். எனவே, நாம் மற்ற மொழிக்கு சென்று அவர்களின் வாய்ப்புகளைப் பறித்து நடிக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல், மற்ற மொழிகளில் நடிக்க வாய்ப்பு வந்தாலும், மும்பை அல்லது ஹைதராபாத்தில் வசிக்கும் ஒரு மலையாளி கதாபாத்திரம் கிடைத்தால், நான் மறுக்காமல் நடிக்கத்தான் விரும்புவேன், என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News