Saturday, September 14, 2024

நான் தமிழ் மலையாளம் என்றெல்லாம் மொழியை பிரித்து பார்ப்பதில்லை… நிமிஷா சஜயன் OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான நிமிஷா சஜயன் தற்போது தமிழ் சினிமாவிலும் தன்னுடைய இடத்தை பரவலாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். ‘சித்தா’ மற்றும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படங்களில் நடித்த அவர், தற்போது நடிக்கும் புதிய படம் ‘என்ன விலை’. இந்த படத்தை மலையாள இயக்குனர் சஜீவ் பழூர் இயக்குகிறார். கருணாஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க, ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், விஜயலட்சுமி, பசுபதி ராஜ் ஆகியோரும் இதில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவை ஆல்பி ஆண்டனி மேற்கொள்வதோடு, இசையை சாம் சிஎஸ் அமைக்கிறார்.

படம் குறித்து இயக்குனர் சஜீவ் பழூர் கூறியதாவது, “என்ன விலை படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். குறிப்பாக, நிமிஷா சஜயன் போன்ற திறமையான நடிகர்கள் படத்தில் இருப்பதால், படப்பிடிப்பு மிகச் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. முன்னதாக, நிமிஷாவுடன் ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’ என்ற படத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. ஆனால் இப்போது அவர் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, ஒரு உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார். ‘என்ன விலை’ திரைப்படம் ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் புதிதான, வித்தியாசமான நிமிஷாவைக் காண்பிக்கும். முதல் ஷெட்யூல் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் முடிந்த நிலையில், இரண்டாவது ஷெட்யூல் எளிமையான பூஜையுடன் தொடங்கியது. முழு படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிவடையும்.

நிமிஷா கூறியதாவது, “சஜீவுடன் தான் எனது பயணத்தை ஆரம்பித்தேன். இப்போது அவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் நடிப்பதில் பெரும் மகிழ்ச்சி. ஒரு பார்வையாளராக நான் கூட இந்த படத்தை காண ஆவலாக உள்ளேன். இந்த படத்தில் நடிக்க என்னை ஈர்த்த காரணம் கதைதான். அதற்கேற்ற வகையில் எனது கதாபாத்திரமும் அமைந்துள்ளது. எனக்கு அதிகமான வசனங்களும் உள்ளன, மேலும் என் கேரக்டர் பார்வையாளர்களுடன் ஒத்துப் போகும். தமிழ் சினிமாவில் இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எனக்கு பலவிதமான கதாபாத்திரங்கள் கிடைக்கின்றன. தமிழ், மலையாளம் என எந்த மொழியையும் பிரித்துப் பார்க்கவில்லை. மக்கள் என்னிடம் எப்போதும் புதிதாகவே அமைய வேண்டும் என விரும்புகிறார்கள், அதனாலே மொழிக்கு முக்கியத்துவம் தரவில்லை.”

- Advertisement -

Read more

Local News