Saturday, September 14, 2024

நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் நிச்சயதார்த்தமா? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம் இன்று நடைபெறவுள்ளதாக டோலிவுட்டில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி வந்த நிலையில், தெலுங்கு சினிமா வட்டாரத்தில் இந்த தகவல் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை சமந்தா அறிமுகமான ஹே மாய சேசாவே (விண்ணைத்தாண்டி வருவாயா) படத்தில் இணைந்து நடித்த நாக சைதன்யா அவரை உருகி உருகி காதலித்து வந்த நிலையில் இருவரும் 2017ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால், திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து சமந்தா நடித்து வந்த நிலையில், ஏகப்பட்ட சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. 2021ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இந்நிலையில், சோபிதா துலிபாலாவை நடிகர் நாக சைதன்யா நிச்சயம் செய்துக் கொள்ளப் போவதாகவும் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடைபெறும் என தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், இதுதொடர்பாக இருவரும் இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News