தமிழ் சினிமாவில் மெட்ரோ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிரிஷ். இந்த படத்திற்காக அவருக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. மெட்ரோ என்ற படத்தின் பெயரே இவருக்கு மெட்ரோ சிரிஷ் என அடையாளமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து இவர் நடித்த ராஜா ரங்குஸ்கி மற்றும் பிஸ்தா போன்ற படங்கள் இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை கொடுத்தன.நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து
படங்களில் நடித்து வருகிறார். நடிகராக மட்டுமல்லாது சமூக பணிகளிலும் ஆர்வமாக ஈடுபடுகிறார்.


தற்போது நடிகர் சிரிஷிற்கு ஹஸ்னா என்பவருடன் நேற்று ஜூலை 12 திருமணம் நடந்துள்ளது. உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பெரியோர்களின் ஆசியுடன் நடந்த இந்த திருமணத்தை தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக நடிகர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.