ஒரு காலத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக பிரசாந்த் இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் திரைத்துறையிலிருந்து தற்காலிகமாக விலகிய அவர், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
தற்போது ‘அந்தகன்’ என்ற படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021 முதல் 2022 வரை படமாக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளியீடு ஆகாமல் இருந்தது, ஆனால் தற்போது வெளியீடுக்கு தயாராகியுள்ளது.
நீண்ட நாட்களாக தள்ளிப்போன ‘அந்தகன்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், ‘அந்தகன்’ படத்தின் தீம் பாடலை நடிகர் விஜய் வரும் 24ஆம் தேதி வெளியிடுவார் என படக்குழு அறிவித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் அனிருத் மற்றும் விஜய் சேதுபதி இந்த பாடலை பாடியுள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.