Thursday, August 8, 2024

நடிகர் அர்ஜூன் எழுதியுள்ள கதை, திரைக்கதையில் பதிமூன்று மொழிகளில் வெளியாகவுள்ள நடிகர் துருவா சார்ஜாவின் ‘மார்ட்டின்’

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் அர்ஜுன் கதை, திரைக்கதை எழுதியுள்ள ‘மார்ட்டின்’ படத்தில் துருவா சர்ஜா ஹீரோவாக நடித்துள்ளார். ஏபி. அர்ஜுன் இயக்கியுள்ளார். 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசை அமைத்துள்ளார். இதில் வைபவி சாண்டில்யா, அன்வேஷி ஜெயின், சுக்ருதா வாக்லே, அச்யுத்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்ட ஆக்‌ஷன் படமான இது, அக்டோபரில் வெளியாகிறது. 5 இந்திய மொழிகள் உட்பட 13 மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் உதய் மேத்தா தெரிவித்தார்.கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் படத்தை வெளியிடுகிறோம். தவிர, பெங்காலி, அரபு, ஜப்பான், சீனா, ரஷ்யா, ஸ்பானிஷ், கொரிய மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளோம் என்று அவர் கூறினார். இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நாளை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News