Touring Talkies
100% Cinema

Saturday, August 16, 2025

Touring Talkies

தேவர் மகன் 2 படத்தை உருவாக்க நடந்த பேச்சு வார்த்தை… இயக்குனர் முத்தையா பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள்! EXCLUSIVE

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் சசிகுமார் நடித்த ‛குட்டிப்புலி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் முத்தையா. அவர் இதுவரை ‛கொம்பன்’, ‛மருது’, ‛கொடிவீரன்’ போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். முன்னணி நடிகர்களை வைத்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் நமது டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தனது சினிமா அனுபவங்கள் பலவற்றை பகிர்ந்துகொண்டார்.

“என் சினிமா வாழ்க்கையில் பாரதிராஜா மற்றும் மகேந்திரன் ஆகியோர்களே எனது மானசீக குருக்கள். ‛கொம்பன்’ படத்தில் வரும் முத்தையா என்ற கதாபாத்திரத்தை, முதலில் கமல் சார் மனதில் வைத்து எழுதியேன். அவரிடம் சென்று கதையை சொல்ல முயற்சி செய்தேன். பின்னர் ராஜ்கிரண் சார் அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். என் வாழ்க்கையில் நடந்த உண்மைகளை முத்தையா என்ற கதாப்பாத்திரமாக ‛கொம்பனில்’ உருவாக்கினேன்.

 ‛தேவர் மகன் 2’ நீங்கள்தான் இயக்க வேண்டும் என்று‌ தயாரிப்பாளர் முரளி சாரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதற்கு நான் சற்று தயங்கினேன், அது எப்படிப்பட்ட படம் இருக்கும்? ‛தேவர் மகன் 2’ நான் இயக்கினால் நன்றாக அமையுமா என்று கேட்டேன். அதற்கு, “கமல் சார் ஓகே சொன்னால் நீங்களே இயக்க வேண்டும் என்று பதிலளித்தேன். அதன் பின்னர் இன்று வரை அந்த கதை விவாத நிலையில் தான் உள்ளது.

கமல் சார் இல்லாமல் ‛தேவர் மகன் 2’ இயலாது. சக்திவேலுக்கு ஒரு மகள் பிறந்து வளர்ந்தால் அது எப்படி இருக்கும் என்ற வடிவத்தில் கதையை மாற்றலாம். ஆனால் கமல் சாரை வைத்து ‛தேவர் மகன் 2’ படத்தை இயக்குவது என் வாழ்நாள் கனவு” என்று இயக்குநர் முத்தையா தெரிவித்துள்ளார். மேலும் தனது சினிமா அனுபவங்கள் பலவற்றை நம்முடன் பகிர்ந்து கொண்டார் அவற்றை காண இந்த பக்கத்தில் உள்ள யூட்யூப் வீடியோக்களை கண்டு மகிழுங்கள்.

- Advertisement -

Read more

Local News