Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

தேவரா படத்தின் பாடல் படப்பிடிப்பு வீடியோவை பகிர்ந்த நடிகை ஜான்வி கபூர்! இவ்வளவு அழகா இருக்கீங்களே என உருகும் ரசிகர்கள்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஸ்ரீதேவி – தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். தெலுங்கில் ஜூனியர் என் டிஆர் உடன் தேவரா படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் ராவுடன் மிஸ்டர் & மிஸ்ஸஸ் மாஹி திரைப்படம் கடந்த மே 31 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஜூனியர் என்டிஆர் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குநர் கொரடால சிவா இயக்கிவரும் இந்தப் படத்துக்கு ‘தேவரா -1’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத். இந்தப் படத்தில் ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அனிருத் இசையில் சமீபத்தில் தேவரா படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியது. இந்நிலையில், இந்த வீடியோவின் படப்பிடிப்பு விடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News