Friday, September 27, 2024

‘தேவரா’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சரக்கு கப்பல்களை கொள்ளையடிக்கும் குழுவின் உறுப்பினராக இருக்கும் தேவரா எனும் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். முருகா எனும் கதாபாத்திரத்தில் முரளி ஷர்மா நடித்துள்ளார், அவர் தன் குழுவுடன் சேர்ந்து கடத்தல் பொருட்களை விற்று சட்டவிரோதமாக வணிகம் செய்து வருகிறார். ஆனால், ஒரு நிலைப்படி இதெல்லாம் தவறு என்று உணர்ந்த தேவரா அந்த தொழிலில் இருந்து விலகுகிறார். ஆனால், தேவராவின் குழுவில் இருந்த பைரா (சைஃப் அலி கான்) அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் கடைசி நிலை என்ன என்பது தான் தேவரா படத்தின் மையக் கதை. 1970களில் நடைபெறும் கதையை ஃபிளாஷ்பேக் வழியாக ஆவணமாக்கி, இயக்குநர் கொரட்டலா சிவா இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.

வழக்கம்போல ஜூனியர் என்டிஆர் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் சிறப்பாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் அவர் அளிக்கும் புது பரிமாணம் திரையில் தீப்ரகாசத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், கதை அவ்வளவாக முன்னேறாமல் ஒரு இடத்தில் மண்டி கிடப்பது தான் பெரிய குறையாக இருக்கிறது. ஹீரோவிற்கு இணையாக வில்லன் கதாபாத்திரமும், ஹீரோயின் ஜான்வியின் கதாபாத்திரமும் வலுவாக எழுதப்படவில்லை. அதேபோல், அதிக அளவிலான கமர்ஷியல் மசாலாக்களை தேவையில்லாமல் படத்தின் முழுக்க கொரட்டலா சிவா சேர்த்துள்ளார். பிரகாஷ் ராஜின் கதாபாத்திரமும் நிறைவான விதத்தில் பயன்படுத்தப்படவில்லை.

அனிருத்தின் பின்னணி இசையும், ஜூனியர் என்டிஆரின் நடிப்பும் தான் இந்த படத்தை முழுமையாக தாங்கி நிற்கச் செய்கின்றன. அண்டர்வாட்டர் சீன்கள், ரத்னவேலுவின் ஒளிப்பதிவெல்லாம் தரமானதாக இருந்தாலும், படத்தின் திரைக்கதை சிறப்பாக வடிவமைக்கப்படாததே படத்திற்கு பெரிய குறையாக இருக்கிறது.

முதல் பாதியை விட இரண்டாம் பாதி படத்தில் எது எதை நோக்கி செல்கிறது என்பதே புரியவில்லை. அதிகப்படியான கதாபாத்திரங்களைச் சேர்த்து இயக்குநர் எந்தவொரு கதாபாத்திரத்துக்கும் ஆழமான பிணைப்பு வழங்கவில்லை. இது படத்திற்கு மிகப்பெரிய குறையாக மாறியுள்ளது. ஜூனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு கொண்டாடுவதற்கான ஆயுத பூஜை பாடல் உள்ளது. ஜான்வி கபூர் ரசிகர்களுக்கு சுட்டாமல்லி பாடல் நல்ல ஆதரவை பெற்றுள்ளது. இரண்டாம் பாகத்திற்கான லீட் படத்தின் கடைசியில் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News