இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் நேற்று வெளியான படம் ‘தி கோட்’. இந்த படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு போன்ற பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில், விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இதில், மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜயின் வயதை குறைத்துக்காட்ட, டிஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தில் திரிஷா ‘மட்ட’ பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இதற்கிடையில், ‘மட்ட’ பாடலின் படப்பிடிப்பு புகைப்படங்களை திரிஷா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இப்போது, அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவுகின்றன. இதுவரை இப்படத்தில் சிவகார்த்திகேயனும் கேமியோ ரோலில் நடித்துள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.