Thursday, September 5, 2024

தி கோட் படத்தில் அஜித்தா ? த்ரிஷாவும் இருக்காங்களா? அட அப்போ சிவகார்த்திகேயன்?… கசியும் சுவாரஸ்ய அப்டேட்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இன்றைய செப்டம்பர் 5ஆம் தேதியன்று நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான படம் ‘தி கோட்’. இந்த படத்தில் விஜய்யுடன் சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், யோகிபாபு, லைலா, பிரேம் ஜி, ஜெயராம், வைபவ் போன்ற பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் சேர்ந்து மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் இந்நிலையில் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் படத்தில் நடித்தது போன்ற காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருக்கிறார். இதை ஏ.ஜி.எஸ்., எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

தி கோட் படம் வெளியானதும் பலரும் பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில், நடிகர் விஜயகாந்த் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. மேலும், “மட்ட” பாடலுக்கு நடிகை த்ரிஷா விஜய்யுடன் இணைந்து நடனமாடியிருப்பதாக படத்தை பார்த்த ரசிகர்கள் பகிர்ந்துள்ளார்கள்.மேலும் சிவகார்த்திகேயனும் ஒரு குறிப்பிட்ட காட்சியில் இடம்பெற்று ரசிகர்களை மகிழ்வித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நேரத்தில், படத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கிய 2011ஆம் ஆண்டு வெளியான ‘மங்காத்தா’ படத்தின் காட்சியும் இருப்பதாக சில ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இப்படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில், நடிகர் விஜய் “சொல்லு… யார் ஃபேன் நீ? என கேள்வி கேட்டவுடன், ‘மங்காத்தா’ படத்தின் பின்னணி இசை ஒலிக்க அந்த நேரத்தில், திரையரங்கம் முழுவதும் ரசிகர்கள் ஆரவாரத்தால் அதிர்ந்து வருகிறதாம்.

- Advertisement -

Read more

Local News