ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடர், திரைப்படம் போல இரண்டரை மணிநேரத்துக்கு ஒளிபரப்பாகவுள்ளது. சினிமாவில் வருவதைப்போல அந்த இரண்டரை மணிநேரத்தில் காதல், பாசம், வில்லன், மிரட்டல், பிரிவு என அனைத்துவிதமான உணர்வுகளையும் தொடரில் வெளிப்படுத்தவுள்ளனர். சின்னத்திரை தொடர்கள் வார இறுதி நாள்களில் ஒரு மணிநேரம் விளம்பர இடைவேளை இல்லாமல் ஒளிபரப்பாவது வாடிக்கையானது. தொடரின் விறுவிறுப்பைக் கூட்டவும், வார இறுதி நாள்களில் வீட்டில் உள்ள புதிய ரசிகர்களைச் கவரும் வகையிலும் இவ்வாறு ஒளிபரப்பாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more