Tuesday, November 19, 2024

திடீரென மைக்கை நீட்டிய ரிப்போர்ட்டர்.‌.. கடுப்பான மஞ்சு வாரியர்…என்னாச்சு?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மஞ்சு வாரியர் ஒரு ஹோட்டல் காரிடார் ஒன்றில் நின்றபடி யாரோ ஒருவருடன் மொபைல் போனில் மும்முரமாக பேசிக்கொண்டிருக்க அங்கு வரும் ஆண், பெண் இளம் ரிப்போர்ட்டர் இருவர் மஞ்சுவாரியரை பார்த்ததும் அனுமதி இல்லாமலேயே அவரது முகத்திற்கு நேராக மைக்கை நீட்டி கேள்விகள் கேட்க துவங்குவதும், ஒருவர் மஞ்சுவாரியரை புகைப்படம் எடுப்பதும் மொபைல் போன் பேசிக்கொண்டே மஞ்சு வாரியர் அவர்களை தடுப்பதுமாக ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இது நிஜ வீடியோ அல்ல. புட்டேஜ் படத்தின் புரமோஷனுக்காக எடுக்கப்பட்ட ஒரு வீடியோ என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல மஞ்சுவாரியரை தொந்தரவு செய்யும் ரிப்போர்ட்டர்களாக படத்தில் நடித்துள்ள விசாக் நாயர் மற்றும் காயத்ரி அசோக் தான் இந்த புரோமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Video Link: https://www.instagram.com/reel/C9pNao0PBjW/?igsh=enFka3NqcHpmMjhh

- Advertisement -

Read more

Local News