Saturday, September 14, 2024

திடீரென மாற்றப்பட்ட பிரசாந்த்-ன் அந்தகன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி… #ANDHAGAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் பிரசாந்த், பின்னர் திரை துறையில் இருந்து சில ஆண்டுகளாக விலகி இருந்தார். தற்போது கம் பேக் கொடுக்கும் வகையில், மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கும் கோட் திரைப்படத்தில் விஜய், பிரபுதேவாவுடன் இணைந்து பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும், நடிகர் பிரசாந்த், ‘அந்தகன்’ என்ற திரைப்படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார். 2021ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திலேயே எடுத்து முடிக்கப்பட்ட இந்த படம் சில சிக்கல்களால் வெளிவராமல் இருந்த நிலையில் தற்பொழுது வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.

“அந்தகன்’ படம் வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 9-ந்தேதியே வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 15-ந்தேதிக்கு தங்கலான், டிமாண்டி காலணி 2 வெளியாக உள்ள நிலையில், இதனை கருத்தில் கொண்டு அதற்கு முன்னரே ‘அந்தகன்’ படத்தை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

Read more

Local News