Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தள்ளி போகிறதா சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படம், 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட உள்ளது. இப்படம் வருகிற அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. டிரைலரில் உள்ள காட்சிகள் மிகவும் வைரலாகியுள்ளன. அதே அக்டோபர் 10-ம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘வேட்டையன்’. ‘வேட்டையன்’ படத்தின் இயக்குனர் இதற்கு முன் சூர்யா நடிப்பில் ‛ஜெய் பீம்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாமதத்திற்குக் காரணம், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முடிவடையாதது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News