மிர்னா மேனன் என்ற அதிதி மேனன் தனது கேரியரை துவங்கியது சின்னத்திரையில்தான். ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். அதன்பின் தமிழில் நெடுநெல்வாடை என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது சில பிரச்சினைகளால் படம் நின்றுபோனது.

பின்னர் இவர் நடித்து பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை ஆகிய படங்கள் வெளிவந்தது. மேலும், தாய்மொழியான மலையாளத்தில் மோகன்லால் நடித்த பிக் பிரதர் படத்திலும் நடித்தார். புர்கா என்கிற படத்தில் அற்புதமாக நடித்திருந்தார். இந்த படம் ஓடிடியில் வெளியானது. அதன்பின் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தில் அவரின் மருமகளாக நடித்திருந்தார்.

ஒரு பக்கம், கோலிவுட்டில் வாய்ப்புகளை பெற்று ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆசையில் அழகான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.அந்தவகையில், ரசிக்க வைக்கும் உடையில் கியூட்டாக போஸ் கொடுத்து மிர்னா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
