Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தனது கனவு இல்லத்தை கட்டிய நடிகை மிருணாளினி ரவி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‛டிக் டாக்’ மூலம் பிரபலமானவர் நடிகை மிருணாளினி ரவி. சூப்பர் டீலக்ஸ், எனிமி, கோப்ரா, ரோமியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவரின் நீண்டநாள் கனவு இப்போது நிறைவேறி உள்ளது. அதாவது சொந்தமாக ஒரு வீட்டை கட்டி உள்ளார்.வீட்டு கிரக பிரவேசம் மற்றும் குடும்பத்தினர் உடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து, ‛‛என்னுடைய சிறு வயதில் என் அப்பா அவரது அம்மா பெயரில் ஒரு வீட்டை கட்டினார். அதேப்போல் எனக்கும் எனது அம்மா பெயரில் ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்பது கனவு. அந்த கனவு இப்போது நிறைவேறி உள்ளது. உங்கள் அனைவரது ஆசீர்வாதம் மற்றும் அன்பினால் தான் இது சாத்தியமானது. இதற்காக என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News