நடிகர் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, வையாபுரி, நாசர் உள்ளிட்டவர்கள் நடித்துவரும் படம் தக் லைஃப். இயக்குனர் மணிரத்னம் இந்த படத்தின் மூலம் 34 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார். இந்த படமும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு இணைந்து நடித்து வருகிறார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000040040-1-683x1024.jpg)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000040041-1-683x1024.jpg)
முன்னதாக கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்டிஆர்48 படத்தின் சூட்டிங்கில் சிம்பு இணையவிருந்த நிலையில் தக் லைஃப் படத்தையொட்டி எஸ்டிஆர்48 படத்தின் சூட்டிங் தள்ளிப்போனதாக கூறப்படுகிறது. இந்த படம் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இது குறித்து விரைவில் படக்குழுவினர் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000044666-461x1024.jpg)
இந்நிலையில் தக் லைஃப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே, படத்தின் டப்பிங் வேலைகளை துவங்கியுள்ளதாக நடிகர் சிம்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்டேட் தெரிவித்துள்ளார்.