Thursday, September 5, 2024

டோவினோ தாமஸின் ARM ட்ரெய்லர்-ஐ பார்த்துவிட்டு பாராட்டிய பிரம்மாண்ட இயக்குனர் பிரசாந்த் நீல்! #ARM

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாளத்தில் வெளியான “மின்னல் முரளி” படத்தின் மூலம் கேரளா மட்டும் அல்லாது தமிழ்நாடு, கர்நாடகா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த டோவினோ தாமஸ், தற்போது “ARM” படத்தில் மணியன், குஞ்சிக்கெழு, அஜயன் ஆகிய மூன்று வேடங்களில் நடித்துள்ளார். இந்த மூன்று கதாபாத்திரங்களின் பெயர்தான் படத்தின் தலைப்பாகவும் அமைந்துள்ளது.

பான்-இந்தியா ஃபேன்டஸி திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ள “ARM” படத்தை மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் பேனர்களின் கீழ் அறிமுக இயக்குநர் ஜிதின் லால் இயக்கியுள்ளார். “ARM” படம் முழுமையாக 3D தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டு, மலையாள சினிமா வரலாற்றில் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்.

சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பிளாக்பஸ்டர் “KGF” படத்தை இயக்கிய பிரசாந்த் நீல், “ARM” படக்குழுவை சந்தித்த போது, படத்தின் டிரெய்லரை பார்த்து, படக்குழுவின் ஒட்டுமொத்த உறுப்பினர்களையும் பாராட்டினார். டிரெய்லரில் பிரமிக்க வைக்கும் காட்சிகள், டோவினோ தாமஸின் மூன்று தனித்துவமான தோற்றங்கள், படத்தின் மூலம் இயக்குநர் சொல்ல வந்துள்ள விஷயங்கள் பற்றிய பேச்சுக்களும் நடந்தன. பிரசாந்த் நீலின் பாராட்டுக்கள் “ARM” படக்குழுவுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளன.

- Advertisement -

Read more

Local News