Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

டாப் ரெண்டிங்-ல் அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் வெளியான தேவரா ‘தாவூதி’ பாடல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள “தேவரா பாகம் 1” படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிஃப் அலிகான் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். “தேவரா பாகம் 1” பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இதில் ஜூனியர் என்.டி.ஆர் இரு வேடங்களில் நடித்துள்ளார். படத்தின் முதல் பாடலான “ஃபியர் சாங்” மற்றும் “சுத்தமல்லி” சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் செப்டம்பர் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாடலான “தாவூதி” வீடியோ பாடல் இன்று வெளியிடப்பட்டது. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். துள்ளல் இசையுடன் ஜூனியர் என்.டி.ஆரும் ஜான்வி கபூரும் இணைந்து சிறப்பான நடனத்தை இப்பாடலுக்கு வழங்கியுள்ளனர். இப்பாடல் யூடியூபில் ட்ரெண்டாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News