கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். 2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். சமீபத்தில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்றது.
முதற்கட்ட படப்பிடிப்பில் அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் இயக்குநர் மற்றும் நடிகர் உறியடி விஜயகுமார் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை 8 நாட்களில் படமாக்கியதாக தகவல்கள் வெளியாகின.


இந்த நிலையில் சில பிரச்சனைகளால் விஜயகுமார் இப்படத்தை விட்டு வெளியேறியதாக தகவலை அறிந்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.