நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கவிருக்கிறார். சூர்யாவின் 2டி நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிகிறார்.

இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில், இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது. மேலும், படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடக்கவுள்ளது.

இந்நிலையில், சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார் என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் அதிகாரபூர்வ போஸ்டரை வெளியிட்டார். இப்படம் குறித்த மேலும் தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.