ஆர்.ஜே மற்றும் நடிகராக வலம் வரும் விக்னேஷ் காந்த் உலக சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அதாவது ரஜினிகாந்த் பற்றி 50 மணி நேரம் தொடர்ந்து பேசுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதில் இயக்குநர்கள் சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி, தேசிங்கு பெரியசாமி, பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன், நடிகர்கள் நட்டி, ராஜ் கமல், மைம் கோபி, ரியோ, விஜே சித்து உள்ளிட்ட 75க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரஜினிகாந்த் எப்படி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றார் என்பது தொடர்பாக பேசினர். 50 மணி நேரம் நடந்த இந்த நிகழ்வு நேற்று மாலை நிறைவடைந்தது. இதனையடுத்து 50 மணி நேரம் தொடர்ந்து பேசியதற்கான உலக சாதனை சான்றிதழ் விக்னேஷுக்கு வழங்கப்பட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பேசி 50 மணிநேரம் நேரலை நடத்தி கின்னஸ் சாதனை படைத்த வி.ஜே விக்னேஷ் காந்த்!
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more