சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் “கூலி”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார், மேலும் சண்டைக் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்குகின்றனர்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000064508-1-683x1024.jpg)
இந்த நிலையில், படத்தில் மற்ற நடிகர்கள் யார் யார் நடிக்கின்றனர் என்ற அறிவிப்புகளை படக்குழு இன்று முதல் ஒவ்வொரு அப்டேட்டாக வெளியிட்டு வருகிறது. அதன் முதல் அப்டேட்டாக, மலையாள நடிகர் சௌபின் சாஹிர், “கூலி” படத்தில் தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, இணையத்தில் நடிகர் சௌபின் சாஹிர் தனது குடும்பத்தினருடன் சூப்பர் ஸ்டாரை சந்தித்த புகைப்படம் பரவி வருகிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000064572-831x1024.jpg)