Tuesday, July 2, 2024

சிறிய பட்ஜெட் படங்கள் வருவதும் தெரிவதில்லை போவதும் தெரிவதில்லை… வருத்தப்பட்ட அனுராக் காஷ்யப்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார் அனுராக் காஷ்யப். அதற்குப் பிறகு, ‘மகாராஜா’ படத்தில் மீண்டும் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் இயக்கிய ‘கென்னடி’ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அரசியல் மற்றும் சினிமா சர்ச்சைகள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிப்பவர் மற்றும் அறிமுக நடிகர்கள், இயக்குநர்களின் படங்களை மனமுவந்து பாராட்டுபவர்.

பாலிவுட்டில் சிறிய பட்ஜெட் படங்களுக்கு சரியான விளம்பரங்கள் இல்லாததால், அவை பெரும்பாலும் தியேட்டருக்கு வருவது கூட தெரியாமல் போய்விடுகின்றன என்று அனுராக் காஷ்யப் கூறியுள்ளார். “பெரிய பட்ஜெட் படங்கள் அதிக அளவில் விளம்பரத்திற்குச் செலவழித்து பார்வையாளர்களைத் தியேட்டருக்கு கொண்டு வருகின்றன. ஆனால், சரியான மார்க்கெட் பட்ஜெட், விளம்பரங்கள் இல்லாததால் சிறிய பட்ஜெட் படங்கள் தெரியாமல் போய்விடுகின்றன.

பாலிவுட்டில் பல நல்ல திரைப்படங்கள் இவ்வாறு காணாமல் போயிருக்கின்றன. ஆனால், தென்னிந்திய சினிமாவில் அவ்வாறு இல்லை. அங்கு அறிமுக நடிகர்கள், இயக்குநர்களின் படங்களும் நல்ல வெற்றியையும் வசூலையும் பெறுகின்றன. நல்ல சினிமாவை அவர்கள் கொண்டாடுகின்றனர். பெரிய நட்சத்திரங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு அறிமுக நடிகர்களுக்கும், இயக்குநர்களுக்கும் கிடைக்கிறது” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News