

தனது 10 வருட சின்னத்திரை பயணத்தை குறித்து இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ள சைத்ரா, ‘இந்த துறையில் எனது 10 வருட பயணத்தை திரும்பி பார்க்கும் போது என் இதயம் மிகுந்த நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் நிறைந்துள்ளது. 19 வயதில் இந்த பயணத்தை தொடங்கினேன். படிப்படியாக உங்கள் அன்பு என்னை இங்கே கொண்டு வந்துள்ளது. இந்த கனவை அழகாக நனவாக்கிய அனைவருக்கும் என் இதயத்தில் ஆழத்திலிருந்து நன்றி’ என அந்த பதிவில் கூறியுள்ளார். சைத்ராவின் இந்த சாதனை பயணத்திற்கு சக நடிகர்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகள் குவித்து வருகின்றனர்.
