சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. ஆனால், இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. நடிகரும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, இப்படத்தின் மீது எதிர்மறை கருத்துகளை திட்டமிட்டு பரப்பியதாக குற்றம்சாட்டி, விமர்சனங்களை கண்டித்தார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், நடிகை அமலாபால் தனது சமூக வலைதள பக்கத்தில் ஜோதிகாவின் கருத்தை ஆதரித்து பதிவிட்டுள்ளார். அதில், “சினிமா துறையில் புதிய முயற்சிகளை வரவேற்றிட வேண்டும். தயாரிப்பாளரின் உழைப்பை மதிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும், இயக்குனர் சீனுராமசாமி, “சூர்யா போன்ற கல்வி பணிக்கு மாபெரும் ஆதரவு வழங்கி வரும் ஒரு பிரபலத்தை அவதூறாக விமர்சிப்பது வருத்தம் தருகிறது. இது திரைத்துறையிலும் தொழில் முனைவோரிலும் பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்துகிறது” என்று தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
