Tuesday, July 2, 2024

சம்பவம் செய்த தி கோட்… இத்தனை கோடிக்கு சாட்லைட் விற்பனையா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தில் விஜய், தந்தை மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தின் கதைக்களம் டைம் டிராவல் காலப்பயணத்தை மையமாகக் கொண்டதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.நடிகை த்ரிஷா விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பதால் இந்தப் பாடல் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

அதே போல சிவகார்த்திகேயனும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும், ஏற்கனவே சென்னையில் இதறகான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. கூடுதலாக, பிரேம்ஜி மற்றும் வைபவ் உட்பட வெங்கட் பிரபுவின் குழுவும் இப்படத்தில் இணைந்துள்ளனர்.வெங்கட் பிரபு இவ்வளவு நட்சத்திரங்களை எப்படி படத்தில் இணைத்துள்ளார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமம் அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட் படத்தின் அனைத்து இந்திய மொழிகளின் சாட்டிலைட் உரிமையை 93 கோடி ரூபாய்க்கு Zee Network பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தளபதி 69 படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க நெட்ஃபிளிக்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

Read more

Local News