தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் (Dubai 24H Race) பங்கேற்றார். இந்த தொடரில் அஜித்தின் அணியான பாஸ் கோட்டனின், ரேசிங் 991 பிரிவில் 3வது இடத்தை பிடித்து அசத்தியது.
கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித் மற்றும் அவரது அணியினருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் அஜித் குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“சமூகவலைதளங்கள் இப்பொழுது மிகவும் டாக்சிக்காக உள்ளது. இது ஆரோக்கியமானது அல்ல. இதற்கு ஒரு தீர்வு கிடைத்தாக வேண்டும். உலகளவில் மன ஆரோக்கியம் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. சிறிய வாழ்க்கையில் ஏன் இவ்வளவு வெறுப்பு ? என்றுள்ளார். அதேபோல் இளைஞர்கள் சாலைகளில் விதிகளை மீறி சாகசம் செய்கின்றனர் இதனால் பலர் உயிரிழக்கின்றனர் இது பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. ட்ராக்கில் ஓட்டி உங்கள் திறமையை வளர்த்துக் கொண்டு முன்னேறி வெற்றிப் பெறுங்கள் என ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் நடிகர் அஜித்.