Tuesday, November 19, 2024

சமந்தா சொன்ன அப்டேட்… இது என்னவாக இருக்குமென குழப்பத்தில் ரசிகர்கள்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, பின்னர் விவாகரத்து பெற்று விட்டார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருபவர், மயோசிட்டிஸ் நோய் சிகிச்சைக்கு பிறகு தற்போது பாலிவுட்டில் ஒரு வெப் சீரியலில் நடித்து வருகிறார்.

இதையடுத்து தான் நடிக்கும் புதிய படங்களின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்றும் அறிவித்திருக்கிறார். இப்படியான நிலையில், தற்போது தனது இன்ஸ்ட்டாவில் அதிர்ஷ்ட குக்கியில் தனக்கு கிடைத்த ஒரு துண்டு சீட்டை போல் பதிவிட்டு இருக்கிறார் சமந்தா.

அதில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பார்ட்னர் கிடைப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சீட்டை காண்பித்தபடி தன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சமந்தா, ‛01.08 சவுண்ட்ஸ் லைக் எ டேட்?’ என பதிவிட்டு இருக்கிறார்

- Advertisement -

Read more

Local News