பார்த்திபன் இயக்கியுள்ள டீன்ஸ் திரைப்படம் ஜூலை 12ம் தேதி கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படத்துடன் போட்டியாக ரிலீஸ் ஆகிறது. ஆயிரம் தியேட்டர்களில் கமல் படம் வெளியாகிறது என்றும் தனது படம் குறைவான தியேட்டர்களிலேயே வெளியாகிறது என பார்த்திபன் கூறினார். டீன்ஸ் படத்தின் புரமோஷனுக்காக பேசி வரும் பார்த்திபன் தனது காதல், திருமணம், விவாகரத்து உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றியும் பேசியுள்ளார். நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசியது விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
விஜய் 250 கோடி சம்பளம் வாங்கும் ஹீரோவாக இருக்கும் போது அதையெல்லாம் விட்டு விட்டு அரசியலுக்கு முழு நேர அரசியல்வாதியாக வந்து மக்களுக்கு சேவை செய்யப் போகிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக அதை வரவேற்கத்தான் செய்ய வேண்டும் என்றார்.
இப்படி நான் சொன்னால், சோஷியல் மீடியாவில் எனக்கு எதிரான கருத்துகள் குவியும். 250 கோடி ரூபாய் சம்பளத்தை விட்டு விட்டு விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று நான் சொன்னால், விவரம் தெரியாத ஆளாக இருக்கீங்களே அவர் அரசியலுக்கு வருவதே 2500 கோடி சம்பாதிக்கத்தான் என ஒரு சிலர் தங்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர். அது வேறு கோணத்திலான கருத்து, அதை வரவேற்கலாம். அதை விவாதிக்கலாம். ஆனால், வெறுமனே திட்டுபவர்களை கண்டுக் கொள்ளக் கூடாது என பார்த்திபன் பேசியுள்ளார்.