நயன்தாரா தற்போது தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகள் உலகு மற்றும் உயிர் இவர்களுடன் கோடை விடுமுறையை கொண்டாடி வருகிறார். திரைத்துறையில் பிஸியாக இருந்தாலும், இருவரும் தங்கள் குடும்பத்திற்காகவும், குழந்தைகளுக்காகவும் அவ்வப்போது நேரம் ஒதுக்கி வருகின்றனர்.

இந்நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் தம்பதி தங்கள் குழந்தைகளுடன் ஹாங்காங் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். சமீபத்தில், நீருக்கடியில் அமைந்துள்ள உயிரியல் பூங்காவில் மகன்கள் உலகு மற்றும் உயிர் விளையாடும் காணொளியை நயன்தாரா சோசியல் மீடியாவில் பகிர்ந்தார், இது இணையத்தில் வைரலானது.
தற்போது விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிஸ்னிவேர்ல்டில் குடும்பத்துடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், உயிர், உலகு மற்றும் நயன்தாரா மூவரும் வெள்ளை ஆடையில் அழகாக காணப்படுகின்றனர்.

இந்த புகைப்படத்திற்கு அவர், “போடா போடி ஷூட்டிங்கிற்கான அனுமதி கேட்டு 12 ஆண்டுகளுக்கு முன் செருப்பு மற்றும் கையில் 1000 ரூபாய் பணத்துடன் இங்கே வந்தேன்” என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தற்போது, விக்னேஷ் சிவன் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார், இதில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கிறார்.