தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா. இந்த படத்தை சேகர் கம்முலா இயக்குகிறார். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நாகார்ஜூனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் நாகார்ஜூனா கதாபாத்திரத்தின் வீடியோ கிளிம்ஸ் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரத்தின் வீடியோ ஜூலை 5 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.