Tuesday, November 19, 2024

குடும்பமாக சென்று பிரதமரை நேரில் சந்தித்து தனது மகளின் திருமண அழைப்பிதழை வழங்கிய நடிகர் சரத்குமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நேற்று ஜூன் 28ஆம் தேதி நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார், அவரது மகள் வரலட்சுமி சரத்குமார் மற்றும் வரலட்சுமி சரத்குமாரின் காதலர் நிக்கோலாய் சச்தேவ் ஆகியோர் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமரைச் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பிரதமருக்கு வரலட்சுமி சரத்குமாரின் திருமணத்திற்கான அழைப்பிதழைக் கொடுத்தனர். இது தொடர்பாக சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “பாரத பிரதமர் நரேந்திர மோடிஜியை இன்று காலை டெல்லியில் அமைந்துள்ள பாராளுமன்ற இல்லத்தில் குடும்பத்தினருடன் சென்று சந்தித்து பேசியதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

நானும், எனது மனைவி ராதிகா சரத்குமார் அவர்களும் நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியடைந்து, இந்தியாவின் வரலாற்று சாதனையாக மூன்றாவது முறையாக பாரத பிரதமராக மோடிஜி தேர்வானதற்கு வாழ்த்துகளை தெரிவித்து, சென்னையில் நடைபெறவுள்ள மகள் வரலட்சுமி – நிக்கோலாய் ஆகியோரின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தோம்.

மேலும், நமது பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் கட்சி பணிகள், மக்கள் பணிகள் குறித்தும், தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சி குறித்தும் கலந்துரையாடியதில் மகிழ்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News