நடிகை பூர்ணிமா சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால், சொந்தமாக அராத்தி என்ற யூட்யூப் சேனலை தொடங்கினார். அதில், புது புது எபிசோட்களாக நகைச்சுவை வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இவர் பதிவிடும் வீடியோக்கள் க்ரியேட்டிவாகவும் என்டர்டெயின்மென்டாகவும் இருந்ததால் இவருக்கென ரசிகர்கள் பட்டாளம் சேர்ந்தது.


இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக சென்ற பூர்ணிமா, மாயாவுடன் சேர்ந்து கொண்டு பிரதீப் ஆண்டனிக்கு எதிராக போர் கொடி தூக்கினார். இருந்தாலும், பிக் பாஸ் வீட்டில், 96வது நாள் தாக்கு பிடித்த இவர் 16 லட்சம் ரூபாயுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதுமட்டுமில்லாமல், 96 நாட்கள் வீட்டில் இருந்ததற்காக, 30 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு படவாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த இவருக்கு, செவப்பி என்கிற பட வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து மேலும் பட வாய்ப்புகளுக்கா முயற்சி செய்து வருகிறார் பூர்ணிமா ரவி. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பூர்ணிமா ரவி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.