Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

காந்த கண்களால் கவர்ந்து இழுக்கிறாரே… ப்ளாக் உடையில் சமந்தாவின் லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழி படங்களிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சமந்தா. தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தில் அறிமுகமானார். அதன்பின் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் மாறி மாறி நடிக்கத் தொடங்கினார். துவக்கத்தில் இளம் நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார். விஜயுடன் தெறி, மெர்சல், கத்தி போன்ற படங்களில் நடித்தார்.

தெலுங்கில் நாக சைதன்யாவுடன் நடிக்கும்போது அவருடன் காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். சமந்தாவின் விவாகரத்து விவகாரம் ஊடகங்களில் அதிக அளவில் விவாதிக்கப்பட்டது.சமந்தாவைப் பற்றி மிகவும் தவறாக பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். ஆனால், அதற்கெல்லாம் சமந்தா அசரவில்லை. திரைப்படங்களில் நடிப்பது, மாடலிங் செய்வது, ஹிந்தி படங்களில் நடிப்பது, பிடித்த வெளிநாடுகளுக்கு நண்பர்களுடன் செல்வது என தனக்கு பிடித்ததைச் செய்யத் தொடங்கினார்.

ஒருபக்கம், தோல் நோயாலும் பாதிக்கப்பட்டார். இதற்காக கடந்த சில வருடங்களாக சிகிச்சையும் பெற்று வருகிறார். ஆனாலும், வலிகளைத் தாண்டி சினிமாவில் நடித்து வருகிறார். இப்போது ஒரு ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார். எனவே, அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.ஒருபக்கம், கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் கவர்ச்சி உடைகளை அணிந்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார். இந்நிலையில், ஹிந்தி பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.தற்போது அவை வைரலாகி வருகின்றன.

- Advertisement -

Read more

Local News