Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கவிதை வரிகளுடன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட டாப்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துத் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் டாப்சி பன்னு. லாரன்ஸ் நடித்த முனி 3 படத்தில் பேயாக நடித்து பயமுறுத்தினார்.தொடர்ந்து தெலுங்கு மொழியில் பல படங்களில் நடித்து வந்தார். ஷாருக்கானுடன் இணைந்து நடித்த ‘டங்கி’ படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் டென்மார்க் பேட்மின்டன் விளையாட்டு வீரர் மத்தியாஸ் போவை டாப்சி காதலித்து வந்தார். இவர்களின் திருமணம் கடந்த மார்ச் 23-ந்தேதி உதய்பூரில் நடைபெற்றது.திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் டாப்சி சமூக வலைதளங்களிலும் தீவிர ஆர்வம் கொண்டவர். அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டு, என் உதடுகளும் உள்ளங்கால்களும் சிவந்திருக்கும் போது பச்சையாக என்னை நோக்கி வராதே என தலைப்பிட்டு படத்தை பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News