Saturday, July 13, 2024

கவர்ச்சி உடையில் ரசிகர்களை திணற வைத்த எமி ஜாக்சன்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் தனது முதல் பார்ட்னரை விட்டு விலகி ஒரு ஆண் குழந்தையுடன் இருக்கும் நிலையில், அடுத்ததாக இங்கிலாந்து நடிகருடன் காதலில் விழுந்து, தற்போது அவருடன் வாழ்ந்து வருகிறார்.

பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்ற எமி ஜாக்சன் அங்கே நீச்சல் குளம் அருகே கவர்ச்சி உடையுடன் சுற்றித் திரியும் புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

குழந்தை பிறந்த பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்து வந்த எமி ஜாக்சன் சில விளம்பர படங்களிலும், வெளிநாட்டு வெப் தொடரிலும் நடித்துவந்தார். அதன் பின்னர் மீண்டும் ஏ.எல். விஜய் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான மிஷன் சாப்டர் ஒன் படத்தில் அருண் விஜயுடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News