Tuesday, November 19, 2024

கமல்ஹாசனும் அமிதாப் பச்சனும் மோதலா? கல்கி 2 குறித்து பகிர்ந்த இயக்குனர் நாக் அஸ்வின்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்து வெளியான படம், ‘கல்கி 2898 ஏடி’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது. இதுவரை இப்படம் ரூ.800+ கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அமிதாப் பச்சனுக்கும் கமல்ஹாசனுக்கும் இடையிலான மோதல் காட்சி இருக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த இயக்குனர் நாக் அஸ்வின் கூறுகையில்,

இரண்டாம் பாகத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. புதிய கதாபாத்திரங்களும் இருக்கும். புதிய உலகமும் உருவாகும். அதேபோல் இந்த இரண்டு லெஜண்ட்டுகள் மோதும் காட்சிகளும் இருக்கலாம். ஆனால், அதைப் பற்றி இப்போது பேச முடியாது என்று நினைக்கிறேன். இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு 25 முதல் 30 நாட்களில் முடிந்திருக்கிறது. ஆனால், அது 60 சதவிகிதம் மட்டுமே முடிந்துள்ளது. இன்னும் நிறைய படப்பிடிப்பு உள்ளது.

- Advertisement -

Read more

Local News