தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கேத்ரின் தெரசா. தமிழ் சினிமாவில் ‘மெட்ராஸ்’ திரைப்படம் மூலம் அறிமுகமான அவர், அதன் பின்னர் கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ எனும் திரைப்படத்தில், கேத்ரின் தெரசா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 24-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் ‘குப்பன்’ எனும் பாடலுக்கு அவர் கிளாமராக நடனமாடியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் கேத்ரின் தெரசா கலந்து கொண்டார். அப்போது, உங்களுக்கு கதையே இல்லை என்றாலும் எந்த நடிகருடன் நடிப்பீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கதையே இல்லையென்றாலும், அஜித் சாருடன் நடிக்க எனக்கு ஆசை இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.