ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜீனி’ படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி, வாமிகா கபி ஆகியோர் மூன்று ஹீரோயின்களாக நடித்துள்ளனர். 31 வயதான கல்யாணி பிரியதர்ஷன், மலையாளத்தில் ‘ஓடும் குதிரை’ எனும் படத்திலும் நடித்துவருகிறார். இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் ஜெயம் ரவியின் ‘ஜீனி’ படத்தில் நடித்து முடித்ததாகவும், அடுத்ததாக புதிய படத்தில் கமிட்டாகி இருப்பதாகவும், விரைவில் அது குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என கூறியுள்ளார்.
கல்யாணி பிரியதர்ஷன், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் தன்னுடைய சாப்பாட்டின் அளவை காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், ஆண் நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படமும் வெளிவந்துள்ளது.
மற்றொரு புகைப்படத்தில், கல்யாணி பிரியதர்ஷன் அழுவது போல தெரியும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அது படத்தின் டப்பிங் முறைப்பாடு மட்டும் என்றும், யாரும் பயப்பட வேண்டாம், எனக்கு எதுவும் ஆகவில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், “அழும் புகைப்படத்துக்குப் பயமில்லை, நீச்சல் குள போட்டோவுதான் பயமுறுத்துகிறது” என்று கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.