ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், சங்கத்தமிழன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள பார்டி படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. தற்போது அவர் கைவசம் எந்த படமும் இல்லை. சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இதுதவிர விளையாட்டு மற்றும் ரேஸில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில், நான் எதிர்மறையாக என்ன நினைத்தாலும் அது நடந்துவிடும். ஒருமுறை என் பாய் பிரண்ட் என்னை ஏமாற்றிவிடுவது போன்று கற்பனை செய்திருந்தேன். அதுபோலவே நடந்து, அவர் இன்னொருவருடன் சென்றுவிட்டார். இப்போது வைத்துள்ள கார் முதல் எதிர்காலத்தில் வாங்க உள்ள கார் வரை நான் கற்பனை செய்து வைத்தவையே,என்றுள்ளார் நிவேதா பெத்துராஜ்.