கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் ரெஜினா. தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்தின் “விடாமுயற்சி” படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தனது ஒரு பேட்டியில், அவர் கூறியதாவது: “என் தனிப்பட்ட வாழ்க்கையை நான் மறைத்தது இல்லை. கடந்த காலங்களில் பலருடன் நான் உறவுகளில் இருந்தது உண்மைதான். ஒரு வரியில் சொல்வதென்றால், நான் ஒரு ‘சீரியல் டேட்டர்’ என்று சொல்லலாம். தற்போதெல்லாம் நான் அதிலிருந்து சிறிது விலகி இருக்கிறேன்.
இப்படி வெளிப்படையாக பேசுவதால் பல விமர்சனங்கள் வரக்கூடும். ஆனால் நான் எந்த ஒன்றையும் மறைக்க விரும்பவில்லை,” என்று அவர் பகிர்ந்துள்ளார். ரெஜினாவின் இந்த ஓபன் டாக்உரையாடலை சமூக வலைதளங்களில் பலரும் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.