Saturday, September 14, 2024

என்னை உருவ கேலி எல்லாம் கூட செய்தார்கள் – அபிராமி ஓபன் டாக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் அனுராக் காஷ்யப், பாரதிராஜா, அபிராமி, மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, திவ்ய பாரதி, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள அபிராமி சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அதில் உடல் எடை அதிகரித்தது குறித்து பேசிய அபிராமி, “மீடியாவில் மட்டுமல்லாமல், வெளியில் இருந்தும் என்னை உடல் அவமதிப்பு செய்தார்கள். நான் கொஞ்சம் உயரமாக இருப்பதால், பலவகையான உடல் அவமதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன். அதோடு எடை கூடிவிட்டதால், சிலர் என்னை ‘குண்டாகிவிட்டாய்’ என்று கேட்பார்கள். இதனால் நான் பலமுறை மன அழுத்தத்தில் இருந்தேன்.

மேலும், நான் எடை கூடியிருந்த போது, என்னுடைய போட்டோவை பார்த்த போது, எனக்கே ஒரு மாதிரிதான் இருக்கும். உடல்ரீதியான பல்வேறு காரணங்களால், என்னுடைய எடை கூடியது. அதை என்னால் அப்போது நன்றாகவே புரிந்து கொள்ள முடியவில்லை,” என்றார்.

- Advertisement -

Read more

Local News