Tuesday, July 2, 2024

என்கிட்ட இந்த படத்த பார்த்துட்டு 10,000 கேள்விகள் கேட்டாங்க… அனுராக் காஷ்யப்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அனிமல் படம் வெளியான சமயத்தில் அது ஆணாதிக்க வன்முறை நிறைந்ததாக பல தரப்பில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. சமீபத்தில் ‘மகாராஜா’ படத்தில் வில்லனாக நடித்திருந்த அனுராக் காஷ்யப், “‘அனிமல்’ திரைப்படத்தையும், இயக்குநர் சந்தீப் வங்கா ரெட்டி குறித்தும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. எனக்கும் ‘அனிமல்’ திரைப்படத்தின் மீது பல விமர்சனங்கள் இருந்தன. பிறகு, இரண்டாவது முறையாகப் பார்த்தேன். முதல் பாதி பிடித்திருந்தது. இரண்டாம் பாதியில் பல சிக்கல்கள் இருந்தன. என் படம் வெளியான சமயத்தில் பதிவிட்டிருந்தனர்.

சமீபத்திய நேர்காணலில் பேசிய இயக்குநர் அனுராக் காஷ்யப், “‘அனிமல்’ திரைப்படத்தில் சண்டைக் காட்சிகள் இயல்பாக இருந்தன. இசை பிரமாதமாக இருந்தது. ரன்பீர் கபூரின் நடிப்பு சிறப்பாக இருந்தது. படத்தின் முதல் பாதி சிறப்பாக இருந்தது. ஆனால், இரண்டாம் பாதியில் சிக்கல்கள் இருக்கின்றன. நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. படத்தை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால், இயக்குநரை தனிப்பட்ட முறையில் தாக்குவது தவறு.

படத்தின் மீது எனக்கும் விமர்சனங்கள் இருக்கின்றன. அதற்காகக் கண்டனம் தெரிவிக்கவும், தனிப்பட்ட முறையில் தாக்கமாட்டேன். விமர்சனங்களும், கேள்விகளும் இருந்தால் வாய்ப்புக் கிடைக்கும்போது அதை சம்பந்தப்பட்டவர்களிடமே உரையாடித் தீர்வு காண்பதே சிறந்தது. ‘அனிமல்’ திரைப்படம் எனக்குப் பிடித்திருந்தது என்று நான் சொன்னதும் என் மகள் என்னிடம் வந்து பல கேள்விகள் கேட்டார். நண்பர்கள், திரையுலகினர் எனப் பலரும் எனக்கு போன் செய்து 10,000 கேள்விகள் கேட்டனர்.

அவர்களிடம் நான் சொன்ன பதில், “மனிதன் என்று பெயர் வைத்து அதீத வன்முறை, ஆணாத்திக்கம் போன்றவையெல்லாம் இருந்தால் அப்படத்திற்குக் கண்டனம் தெரிவிக்கலாம். ஆனால், அப்படத்தின் பெயரே ‘அனிமல்’ என்றால் ஏன் கண்டனம் தெரிவிக்கிறீர்கள்” என்று சொன்னேன். ரன்பீர் கபூர், அப்படியொரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்ததுதான் இவ்வளவு விமர்சனங்களுக்கு காரணம் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News