Sunday, August 11, 2024

எனக்கே தெரியாமல் என் படத்தில் ஒரு நிமிட காட்சி இடம்பெற்றுள்ளது… மழை பிடிக்காத மனிதன் படம் குறித்து இயக்குனர் விஜய் மில்டன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மேகா ஆகாஷ், சரத்குமார் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் ‛மழை பிடிக்காத மனிதன்’. சஸ்பென்ஸ் திரில்லர் படமாக வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தனக்கே தெரியாமல் படத்திற்கு முன்பு ஒரு நிமிட காட்சி இடம்பெற்றுளள்து என அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.

அவய் வெளியிட்ட வீடியோ பதிவில், ‛இந்த படத்தின் ஹீரோ யார், எங்கிருந்து வந்துள்ளான், ரவுடியா, அடியாளா, டாக்டரா என பல கேள்விகள் வைத்து தான் படத்தை உருவாக்கி இருந்தேன். ஆனால் படம் பார்க்கும்போது எனக்கே அதிர்ச்சியாகிவிட்டது. படத்தின் துவக்கத்தில் எனக்கே தெரியாமல் ஒரு நிமிட காட்சியை வைத்துள்ளனர்.

சென்சார் பண்ண ஒரு படத்தில் எப்படி இதுபோன்ற காட்சி வருகிறது. யார் இவர்களுக்கு இந்த உரிமையை தந்தது என தெரியவில்லை. அந்த ஒரு நிமிட காட்சியை மனதில் ஏற்றாமல் ரசிகர்கள் படத்தை பாருங்கள் என வேண்டுகோளாகவே வைக்கிறேன்” என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News