Tuesday, July 2, 2024

எதிர்மறை விமர்சனங்களுக்கு மனதில் இடம் கொடுத்தால் இந்த கதையைப் போலத்தான் ஆகும் – யுவன் சங்கர் ராஜா பளீச்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS 🎧

யுவன் ஷங்கர் ராஜா ஒரு பேட்டியில், இயக்குநர்களுக்கு கட்டாயம் இசை குறித்த அறிவு இருக்க வேண்டும். அப்படியான அறிவு இருக்கும்போது அது இசையமைப்பாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதே நேரத்தில், என்னால் சிறந்த படத்தை எடுக்க முடியும், ஆனால் இசை குறித்த போதுமான அறிவு இல்லை என சில இயக்குநர்கள் இருப்பார்கள். அவர்கள் இசையமைப்பாளரை முழுமையாக நம்பி படத்தை ஒப்படைப்பது நல்லது. இயக்குநர் ராமைப் பொருத்தவரையில், ‘இதுதான் காட்சி, எனக்கு இதுபோலத்தான் இசை வேண்டும்’ எனக் கூறுவார். அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் அந்த பேட்டியில், “உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? பழைய யுவன் வேண்டும் என்ற கேள்வி உங்களை கோபமடையச் செய்துள்ளதா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு, “நான் எதிர்மறையான விமர்சனங்களை எனது மனதிற்குள் கொண்டு போகவே மாட்டேன். நான் தொடர்ந்து எனது வேலையைச் செய்து வருகின்றேன் எனக் கூறி ஒரு குட்டிக் கதை சொன்னார்.

அதாவது, ஒருவன் ஒரு குதிரை வைத்திருந்தான். அந்த குதிரையோடு அவன் நடந்து சென்று கொண்டு இருந்தான். அப்போது, அந்த வழியே வந்த மற்றொருவன், “குதிரையை வைத்துக் கொண்டு நடந்து போகின்றாய்” எனக் கூறி அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டு அங்கிருந்து போய்விட்டான். உடனே, குதிரை வைத்திருந்தவன் தனது குதிரை மேலே ஏறி பயணம் செய்ய ஆரம்பித்தான். கொஞ்ச தூரம் சென்றதும், இன்னொருவன் எதிரே வந்தான். “வாயில்லா ஜீவன் மீது அமர்ந்து கொண்டு அதனை இப்படி கொடுமை செய்கின்றாய். உனக்கு மனிதாபிமானமே இல்லையா?” எனக் கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். உடனே, குதிரையில் இருந்தவன் கீழே இறங்கி, இப்படியே தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தான். “எதிர்மறை விமர்சனங்களுக்கு மனதில் இடம் கொடுத்தால், இந்த கதையைப் போலத்தான் ஆகும்” என பதில் அளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

பலர், “விஜய் படத்துக்கு இசை அமைத்ததும், விஜய் போல் குட்டிக்கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்” என கூறி வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் சமீபத்தில் ‘ஸ்டார்’ மற்றும் ‘கருடன்’ ஆகிய படங்கள் ரிலீசாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.தற்போது தி கோட் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

- Advertisement -

Read more

Local News