பிரியங்கா மோகன், கன்னட படமான ஒந்த் கத்தே ஹெல்லா மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அவர் முதல்படம் விக்ரம் குமார் இயக்கியது, இது சுமாரான வரவேற்பை பெற்றது. ஆனால் பிரியங்காவின் நடிப்பும் அழகும் ரசிகர்களை கவர்ந்தது.

சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான டாக்டர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். படம் மெகா ஹிட்டானது, பிரியங்காவின் நடிப்பும் வரவேற்பை பெற்றது. இதனால் தமிழில் மேலும் வாய்ப்புகள் கிடைத்தன.டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்தார். கடைசியாக அவர் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதில் தனது திறமையை நன்றாகவே வெளிப்படுத்தியிருந்தார்.






தற்போது பல படங்களில் பிஸியாக இருக்கும் பிரியங்கா, விரைவில் டாப் நடிகைகளில் ஒருவராக வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அவர் ஊதா நிற உடையில் புதிய ஃபோட்டோஷூட் நடத்தினார், இது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.