நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் வெப் தொடரில் மீண்டும் நடித்து வருகிறார் நஸ்ரியா. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சாந்தனு மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த தொடரை இயக்குனர் ஏ. எல். விஜய் தயாரிக்க, சூர்யா பிரதாப் இயக்குகிறார். இந்த வெப் தொடரின் கதை 1940களின் காலகட்ட பின்னணியில் நடைபெறுகிறது. உண்மைச் சம்பவமான லஷ்மிகாந்தன் கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு இந்த தொடர் உருவாகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது. தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்த வெப் தொடரை சோனி லிவ் ஓடிடி தளத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more