நடிகர் கவுதம் கார்த்திக் தமிழில் ‘கிரிமினல்’ மற்றும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது அவர் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘ஜிப்ஸி’ மற்றும் ‘ஜப்பான்’ படங்களை இயக்கிய ராஜு முருகன் எழுதிய கதையில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். அவரின் பிறந்தநாளையொட்டி ‘GK 19’ பட அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படத்தை ராஜு முருகனின் உதவியாளர் தினா ராகவன் இயக்குகிறார். தென்சென்னையில் வாழும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை அரசியலுடன் நகைச்சுவையாக படமாக்க உள்ளது. இந்தப் படத்தை எம். ஜி. ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.பி.வி. மாறன் மற்றும் டாடா இயக்குநர் கணேஷ் கே.பாபு இணைந்து தயாரிக்கின்றனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.